< Back
தேசிய செய்திகள்
இளம்பெண்ணை கரம் பிடித்த முதியவர்
தேசிய செய்திகள்

இளம்பெண்ணை கரம் பிடித்த முதியவர்

தினத்தந்தி
|
10 Sept 2023 3:35 AM IST

சிக்பள்ளாப்பூர் அருகே 30 வயது இளம்பெண்ணை 60 வயது முதியவர் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் அருகே 30 வயது இளம்பெண்ணை 60 வயது முதியவர் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்.

வயது தடையில்லை

காதலுக்கு கண்ணும் இல்லை. சாதி, மதம் மட்டுமின்றி வயதும் தடையில்லை என்பது காதலர்களின் வேத வாக்கு. இன்றைய காலக்கட்டத்தில் வயது குறைந்த பெண்ணை வயதில் மூத்த ஆணும், வயதில் மூத்த பெண்ணை வயதில் குறைந்த ஆணும் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில் கர்நாடகத்தில் 60 வயது முதியவர் 30 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

60 வயது முதியவர்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா அப்பேகவுடனஹள்ளி கேட் பகுதியை சேர்ந்தவர் எரண்ணா (வயது 60). இவரது மனைவி வயோதிகம் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துபோனார். வயதான காலத்தை துணையை இழந்து தவித்த எரண்ணா தனது இறுதி காலத்தை கழிக்க வாழ்க்கையை துணையை தேடினார். இதையடுத்து அவர் இ்ன்னொரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொள்ள ஆயத்தமாகி வரன் தேடும் படலத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னை விட 30 வயது குறைந்த இளம்பெண் அவருக்கு கிடைத்தது. அந்த பெண்ணின் பெயர் அனு.

இளம்பெண்ணை கரம் பிடித்தார்

அவரை எரண்ணாவுக்கு 2-வதாக மணம் முடித்து கொடுக்க பெண்ணின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இருவருக்கும் நேற்று அப்பே கவுடனஹள்ளி கேட் பகுதியில் உள்ள பயல் ஆஞ்சநேயா சாமி கோவிலில் திருமணம் நடந்தது. மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னர் எரண்ணா, அனு கழுத்தில் தாலி கட்டினார். இதில் இருவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

30 வயது இளம்பெண்ணை 60 வயதான முதியவர் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ருசிகர விவாதமாக மாறிப்போனது.

இது புதிது அல்ல...

இதுபோன்ற திருமணம் கர்நாடகத்திற்கு புதிது அல்ல. ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சவுதனகுப்பே அருகே அக்கிமாரிபாளையத்தை சேர்ந்த சங்கரண்ணா (45), 25 வயதான மேக்னா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதில் திருமணமான 2 ஆண்டுகளில் தனது கணவர் மாயமானதால், சங்கரண்ணாவை மேக்னா விரும்பி திருமணம் செய்திருந்தார். ஆனால் மேக்னாவை கரம்பிடித்த 5 மாதத்தில் மனைவியுடனான சொத்து தகராறில் மனம் உடைந்த சங்கரண்ணா தற்கொலை செய்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்