< Back
தேசிய செய்திகள்
ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு
தேசிய செய்திகள்

ரெயிலில் அடிபட்டு முதியவர் சாவு

தினத்தந்தி
|
19 Dec 2022 12:15 AM IST

உப்பள்ளியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் இறந்தார்.

உப்பள்ளி:

தார்வார் நகர் தேஜஸ்வினி நகர் அருகே ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள், ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் அந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவர் யார், எந்தப்பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்