< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சலூன் கடைக்காரரின் நூதன பிரசாரம்
|27 July 2022 2:40 AM IST
சலூன் கடைக்காரர், நூதன பிரசாரம் செய்து வருகிறார்.
ேகாலார்: கர்நாடக மாநிலம் ேகாலார் மாவட்டம் மாலூர் தாலுகா குடியனூர் கிராமத்தை சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தீவிர விசுவாசி ஆவார். இவர் தனது கடையில் தேவேகவுடா, குமாரசாமி ஆகியோரின் படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் அவர், தற்போது நூதன பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.
அதாவது, அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தலில் மாலூர் தொகுதியில் போட்டியிடும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கும் முதியோர், முன்னாள் ராணுவத்தினருக்கு தனது கடையில் இலவசமாக முடி திருத்தம், ஷேவிங் உள்ளிட்டவை செய்வதாக அறிவித்துள்ளார்.