< Back
தேசிய செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலி: 3 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலி: 3 ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Jun 2023 7:11 PM GMT

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

புவனேஷ்வர்,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.

அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால், ரெயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்தன. ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நின்றன, ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி சிதைத்தன. தடம்புரண்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் நொறுங்கி விட்டன.

விபத்தில் சிக்கிய 3 ரெயில்களில் 2 ரெயில்கள் பயணிகள் ரெயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர்.

இதுவரை மொத்தம் 288 பயணிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் எதிரொலியாக 3 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "

நாளை ஹவுராவில் இருந்து பெங்களூரு செல்லும் விஸ்வேஸ்ரயா விரைவு ரெயில் (12863) ரத்து செய்யப்படுகிறது.

நாளை ஹவுராவில் இருந்து சென்னை வரும் சென்னை சென்ட்ரல் மெயில் ரெயில் (12839) ரத்து செய்யப்படுகிறது.

நளை திப்ரூகார்க் - கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரெயில் (22504) சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.



மேலும் செய்திகள்