< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசா ரயில் விபத்து - ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றச்சாட்டு!
|3 Jun 2023 4:31 PM IST
பலரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
சென்னை,
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரெயில் விபத்து குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மிகப்பெரிய அலட்சியத்தால் தான் இந்த ரெயில் விபத்து ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், பலரின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.