< Back
தேசிய செய்திகள்
ஒடிசா ரெயில் விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் - நடிகர் யாஷ் டுவீட்
தேசிய செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் - நடிகர் யாஷ் டுவீட்

தினத்தந்தி
|
3 Jun 2023 5:08 PM IST

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என நடிகர் யாஷ் கூறியுள்ளார்.

சென்னை,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கேஜிஎப் பட நடிகர் யாஷ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து இதயத்தை எவ்வளவு காயப்படுத்தியது என்பதை விவரிக்க முடியாது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மீட்புப் பணிகளில் திரளாக வந்து உதவிய மக்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்