ஒடிசா ரெயில் விபத்தில் மே.வங்கத்தை சேர்ந்த 62 பேர் உயிரிழப்பு.! மம்தா பானர்ஜி
|ரெயில் விபத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 62 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
கொல்கத்தாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒடிசா அருகே சரக்கு ரெயிலுடன் மோடி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் பெங்களூரு- ஹவுரா ரெயிலும் சிக்கியது.
இந்த கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்திருப்பதோடு, பலரும் படுகாயம் அடைந்து பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் மீட்புப்பணிகள் முடிவடைந்து மறு சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த விபத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 62 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய 56 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்; மேலும் 279 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 182 பேர் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.