ஒடிசாவில் அதிர்ச்சி: ரூ.40 பணத்திற்காக வாக்குவாதம்; மளிகை கடைக்காரர் அடித்து கொலை
|கிராமவாசிகள் பண்டாவை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
பத்ரக்,
ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தில் பரல்பொகாரி கிராமத்தில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தவர் பிஜய் பண்டா. இந்நிலையில், வாடிக்கையாளர் ஒருவர் பண்டாவின் கடையில் ரூ.180 மதிப்பிலான பொருட்களை வாங்கி விட்டு, ரூ.140 பணம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.40 பணம் தராமல் அதனை பின்னர் தருகிறேன் என அவர் கூறியுள்ளார். இதனை பண்டா ஏற்கவில்லை.
உடனே மீத தொகையை தரவேண்டும் என கூறியிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இரண்டு பேரும் மோதி கொண்டதில், பண்டா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்ததும், அந்த வாடிக்கையாளர் சம்பவ பகுதியில் இருந்து தப்பி விட்டார்.
கிராமவாசிகள் பண்டாவை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதுபற்றி வாடிக்கையாளருக்கு எதிராக பண்டாவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். சம்பவம் பற்றி பத்ரக் நகர டி.எஸ்.பி. அன்ஷுமன் திவிபேடி கூறும்போது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பண்டாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
அதன் அறிக்கை முடிவிலேயே மரணத்திற்கான காரணம் தெரிய வரும். இதன்பின்பே, நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.