< Back
தேசிய செய்திகள்
ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டம்; மத்திய மந்திரிகள் பங்கேற்பு
தேசிய செய்திகள்

ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டம்; மத்திய மந்திரிகள் பங்கேற்பு

தினத்தந்தி
|
20 Jun 2023 3:34 AM GMT

பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு ஒடிசா சென்ற மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் பூரி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றனர்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள பூரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. இது 42 நாட்கள் நடக்கும், மிக நீண்ட திருவிழாவாகும்.

இந்த நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபதரா வலம் வர உள்ளனர்.

இதனை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்ட நிகழ்வை முன்னிட்டு மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் ஒடிசாவுக்கு சென்றனர். அவர்கள் பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்தா சரஸ்வதி சுவாமியை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறோம் என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.

மேலும் செய்திகள்