< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வயிற்றுப்போக்கால் அவதிப்படும் ஒடிசா மக்கள்...!
|27 Aug 2022 1:27 AM IST
வெள்ளப்பெருக்கை தொடர்ந்து வயிற்றுப்போக்கால் ஒடிசா மக்கள் அவதிப்படுகின்றனர்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் கனமழை மற்றும் அணைகள் திறப்பு சம்பவங்களால் 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. அங்கு இன்னும் சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்திலேயே மூழ்கி உள்ளன.
வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்றொரு பேரிடியாக, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தண்ணீர் தொடர்பான நோய்கள் பரவி வருகின்றன. அந்தவகையில் 900-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதைப்போல வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளாலும் மக்கள் பெரும் தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். 88 பேர் இதுவரை பாம்பு கடிக்கு ஆளாகி உள்ளனர். அவர்களும் சிகிச்சை பெற்று உள்ளனர்.