< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசா எம்.பி. சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு
|11 Feb 2024 6:44 PM IST
விபத்தில் எம்.பி ரமேஷ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் நபரங்பூர் தொகுதி எம்.பி ரமேஷ் சந்திர மாஜி, கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். ராய்ப்பூர் விமான நிலையத்தில் இருந்து உமர்கோட்டில் உள்ள இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அவரது கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எம்.பி ரமேஷ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் உள்பட 3 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.