< Back
தேசிய செய்திகள்
ஒடிசா: முன்னாள் கவர்னர் சந்திரகாந்த் வயது முதிர்வால் காலமானார்
தேசிய செய்திகள்

ஒடிசா: முன்னாள் கவர்னர் சந்திரகாந்த் வயது முதிர்வால் காலமானார்

தினத்தந்தி
|
16 Jun 2024 3:56 AM IST

ஒடிசா முன்னாள் கவர்னர் மறைவுக்கு, முதல்-மந்திரி மோகன் சரண் மஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

புவனேஸ்வர்,

ஒடிசாவை சேர்ந்த முன்னாள் கவர்னர் முரளிதரன் சந்திரகாந்த் பண்டாரே வயது முதிர்வால் காலமானார். அவருக்கு வயது 95. மராட்டியத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர், 3 முறை ராஜ்யசபை எம்.பி.யாக பதவி வகித்திருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார். ஒடிசாவின் கவர்னராக 2007-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 2013-ம் ஆண்டு மார்ச் வரை பதவி வகித்திருக்கிறார். அவருடைய மறைவுக்கு கவர்னர் ரகுபர் தாஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரும் எக்ஸ் சமூக ஊடகத்தின் வழியே இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்