< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசாவில் அமைச்சரவையில் நாளை மாற்றம்...!
|21 May 2023 9:35 PM IST
ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புவனேஷ்வர்,
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா புவனேஸ்வரில் உள்ள லோக் சேவா பவனில் காலை 9.50 மணிக்கு நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் முதல்-மந்திரி பட்நாயக்கின் அமைச்சர்கள் குழுவில் இது சிறிய மாற்றமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், ஒடிசாவில் பேரவைத்தலைவர் மற்றும் இரண்டு கேபினட் அமைச்சர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர்.
இது தவிர, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான நபா கிஷோர் தாஸ் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவர் வகித்த பதவியும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.