< Back
தேசிய செய்திகள்
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்
தேசிய செய்திகள்

ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்

தினத்தந்தி
|
2 May 2024 9:06 PM IST

கன்டாபஞ்சி சட்டசபை தொகுதியில் தனது 2-வது வேட்புமனுவை நவீன் பட்நாயக் இன்று தாக்கல் செய்துள்ளார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வரும் 13-ந்தேதி, 20-ந்தேதி, 25-ந்தேதி மற்றும் ஜூன் 1-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

ஒடிசா சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியின் தலைவரும், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியுமான நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதி கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான ஹிஞ்சிலியில் நவீன் பட்நாயக் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து போலங்கிர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்டாபஞ்சி சட்டசபை தொகுதியில் தனது 2-வது வேட்புமனுவை நவீன் பட்நாயக் இன்று தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்