< Back
தேசிய செய்திகள்
குஜராத் சென்ற ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்!
தேசிய செய்திகள்

குஜராத் சென்ற ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்!

தினத்தந்தி
|
12 Dec 2022 4:31 PM IST

குஜராத் முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேற்ற விழாவுக்கு சென்றிருந்த ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தார்!

ஆமதாபாத்,

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில், அந்தக் கட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் தொடர்ந்து 7-வது முறையாக அந்த மாநிலத்தை ஆளுகிற அதிகாரத்தை பா.ஜ.க.வுக்கு மக்கள் வழங்கி உள்ளனர். அங்கு முதல்-மந்திரியாக இருந்து வந்த பூபேந்திர படேல்தான் (வயது 60) மீண்டும் முதல்-மந்திரி பதவி ஏற்பார் என பா.ஜ.க. மேலிடம் அறிவித்தது.

சட்டசபை தேர்தலில் அவர் காட்லோதியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆமீ யாஜ்னிக்கை 1 லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்த்தில்

சட்டசபை பா.ஜ.க. தலைவராக (முதல்-மந்திரியாக) பூபேந்திர படேல் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கபட்டார்.

இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

குஜராத் முதல் மந்திரியாக பூபேந்திர படேல் பதவியேற்ற விழாவுக்கு சென்றிருந்த குஜராத் சென்ற ஓ.பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம் ஆகியோர் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவைச் சந்தித்தனர்.

மேலும் செய்திகள்