< Back
தேசிய செய்திகள்
அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி
தேசிய செய்திகள்

அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி

தினத்தந்தி
|
6 Jun 2022 3:41 PM GMT

அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியது.

புவனேஷ்வர்,

அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணுசக்தி திறன் கொண்ட அக்னி-4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் இருந்து ஏவப்பட்ட அக்னி-4 ஏவுகணை துல்லியமாக இலக்கைத்தாக்கியது.

1 டன் அணு ஆயுதங்களை ஏந்திச்சென்ற 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கவல்லது அக்னி-4 ஏவுகணை. அக்னி-4 ஏவுகணையின் வெற்றி, இந்திய ராணுவத் திறனை மேலும் வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது. அக்னி-4 என்பது அக்னி வரிசை ஏவுகணைகளில் நான்காவது ஆகும்.

மேலும் செய்திகள்