< Back
தேசிய செய்திகள்
கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

கியூட் இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

தினத்தந்தி
|
15 Sept 2022 4:39 PM IST

கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடுகிறது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய பல்கலைக்கழக பொது நுழைவு தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

நடப்பு கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புக்கான கியூட் தேர்வை தேசிய தேர்வு முகமை, கடந்த ஜூலை மாதம் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை ஆறு கட்டங்களாக நடத்தியது. இந்தியாவில் 259 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே ஒன்பது நகரங்களிலும் என 489 மையங்களில் கியூட் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கியூட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று இரவு 10 மணிக்குள் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என்று பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் cuet.samarth.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் 'CUET UG 2022 முடிவுகள்' என்ற இணைப்பைக் கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் செய்திகள்