< Back
தேசிய செய்திகள்
சித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க  சிபிஐக்கு டெல்லி  ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

சித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
20 May 2022 10:27 AM GMT

தேசிய பங்குச்சந்தை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரிய சித்ரா ராமகிருஷ்ணா மனுவுக்கு பதில் அளிக்க சிபிஐக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

தேசியப் பங்குச் சந்தை முறைகேடு வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சீவ் அகா்வால் முன்னிலையில் கடந்த மே-12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்குரைஞரும் மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அா்ஷ்தீப் சிங்கும் ஆஜராகி வாதாடினாா். அதைத் தொடா்ந்து, மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கு போதிய காரணம் இல்லை என்று கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டாா்.

இதற்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், மனுதாரா் இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும், அவா்கள் சாட்சிகளைக் கலைத்து, ஆதாரங்களை அழித்துவிடுவாா்கள் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் மீண்டும் சித்ரா ராமகிருஷ்ணா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த வழக்கு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான நிலைப்பாடு குறித்து விரைவில் பதில் அளிக்க சிபிஐக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை வருகிற மே 31ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்