< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
'இனி பா.ஜ.க. ராமரை தங்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம்' - சஞ்சய் ராவத் விமர்சனம்
|30 Dec 2023 11:08 PM IST
கடவுள் ராமரின் பெயரால் நிறைய அரசியல் செய்யப்படுகிறது என சஞ்சய் ராவத் எம்.பி. விமர்சித்துள்ளார்.
மும்பை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ராவத், ராமர் கோவில் திறப்பு விழா ஒரு அரசியல் நிகழ்வு என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இனி பா.ஜ.க. ராமரை தங்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம் உள்ளது. கடவுள் ராமரின் பெயரால் நிறைய அரசியல் செய்யப்படுகிறது" என்று விமர்சித்தார்.