மத்திய பிரதேசத்தில் பிரபல ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
|உத்தரபிரதேச போலீசார், தப்பி ஓடிய பிரபல ரவுடியை மத்திய பிரதேசத்தில் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
ஜாவுன்பூர்,
ஆனந்த் சாகர், பிரபல ரவுடி கும்பலான சுபாஷ் யாதவ் கும்பலில் ஒருவன் ஆவான். இவன் ஜாவுன்பூர், அசாம்கார், வாரணாசி மற்றும் மத்திய பிரதேசத்தின் சாட்னா போன்ற இடங்களில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளான்.
இந்த நிலையில் 10 நாட்களுக்கு முன்பாக ஒருவரை கொலை செய்து அவரிடம் இருந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு மத்தியபிரதேசத்தின் ஜாவுன்பூருக்கு தப்பிச் சென்றான்.
இதையடுத்து உத்தரபிரதேச போலீசார், மத்திய பிரதேச போலீசாரின் உதவியுடன் ஆனந்த் சாகரை பிடிக்க முயற்சித்து வந்தனர். நேற்று ஜாவுன்பூர் அருகே அலிகஞ்ச் மார்க்கெட் பகுதியில் அவன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது தப்பி ஓட முயன்ற அவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயம் அடைந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.