< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சபரிமலை தேவசம்போர்டு வெளியிட்ட அறிவிப்பு..!
|15 Sept 2022 8:43 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு குறிப்பிட்ட அளவில் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கான முன்னேற்பாடுகள் குறித்த தேவசம்போர்டு உயர்மட்ட கூட்டம் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.