< Back
தேசிய செய்திகள்
விதிகளை மீறிய 1,645 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
தேசிய செய்திகள்

விதிகளை மீறிய 1,645 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு

தினத்தந்தி
|
28 March 2023 12:15 AM IST

விதிகளை மீறிய 1,645 பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 1,645 பள்ளிகள் மாநில பாடத்திட்டத்தில் செயல்படுவதாக அனுமதி பெற்றுள்ளன. ஆனால் அந்த பள்ளிகள் சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. விதிகளை மீறி அந்த பள்ளிகள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. அந்த குழு அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளது. அந்த அறிக்கையில் தான் இந்த தகவல் வெளியே வந்துள்ளது.

அந்த 1,645 பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு மாதத்திற்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால், அந்த பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தொடர்ந்து அங்கு கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்