< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இந்தியாவின் பெயரை 'பாரத்' என மாற்றுவதில் தவறில்லை - ஆந்திர மந்திரி ரோஜா கருத்து
|6 Sept 2023 5:14 PM IST
‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்வது நல்ல முடிவு என்று ஆந்திர மந்திரி ரோஜா தெரிவித்துள்ளார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா இன்று வி.ஐ.பி. தரிசனம் மூலம் உள்ளே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுடன் ரோஜா புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா என்ற பெயரை 'பாரத்' என மாற்றுவதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் 'பாரத்' என பெயர் மாற்றம் செய்வது நல்ல முடிவு என்று குறிப்பிட்ட அவர், இது தனது தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளார்.