< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
2022-அற்புதமான ஆண்டு அல்ல; சாமானியருக்கு துயரமான ஆண்டு - பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே பதில்
|30 Dec 2022 12:49 AM IST
2022-அற்புதமான ஆண்டு அல்ல, சாமானியர்களின் சமையலறைக்கு துயரமான ஆண்டு என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
பிரதமர் மோடி தனது 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில், ''இந்தியாவுக்கு 2022-ம் ஆண்டு அற்புதமான ஆண்டு'' என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதில் அளித்துள்ளார். அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நரேந்திர மோடிஜி, ஒரே ஆண்டில் சமையல் கியாஸ் விலை ரூ.200 அதிகரித்துள்ளது. பால் விலை சராசரியாக 10 ரூபாயும், பருப்பு விலை 10 ரூபாயும், சமையல் எண்ணெய் விலை ரூ.15 முதல் ரூ.20 வரையும், கோதுமை மாவு விலை 25 சதவீதமும் உயர்ந்துள்ளன.
எனவே, இது அற்புதமான ஆண்டு அல்ல. சாமானியர்களின் சமையலறைக்கு துயரமான ஆண்டு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.