< Back
தேசிய செய்திகள்
குர்ஆன் மட்டுமல்ல கீதையும் ஜிகாத்தை கற்பிக்கிறது காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு
தேசிய செய்திகள்

"குர்ஆன் மட்டுமல்ல கீதையும் ஜிகாத்தை கற்பிக்கிறது" காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சை பேச்சு

தினத்தந்தி
|
21 Oct 2022 6:47 AM GMT

குர்ஆன் மட்டுமல்ல கீதையும் ஜிகாத்தை கற்பிக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் சர்ச்சையைக் கிளப்பி உள்ளார்

புதுடெல்லி:

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஜிகாத்தை போதித்தார். ஜிகாத் என்ற கருத்து இஸ்லாத்தில் மட்டுமல்ல, பகவத் கீதையிலும், கிறிஸ்துவ மதத்திலும் உள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மொஹ்சினா கித்வாயின் வாழ்க்கை வரலாறு புத்த வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய முன்னாள் மக்களவை சபாநாயகரும், மத்திய மந்திரியுமான சிவராஜ் பாட்டீல் கூறியதாவது

இஸ்லாம் மதத்தில் ஜிஹாத் பற்றி அதிகம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.இது குர்ஆனில் மட்டுமல்ல, மகாபாரதத்திலும், கீதையில் உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் ஜிஹாத் பற்றி பேசுகிறார், இந்த விஷயம் குரான் அல்லது கீதையில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் உள்ளது.

மொஹ்சினா கித்வாயின் புத்தகம் உங்கள் மதத்தைப் பின்பற்றும் அதே வேளையில் அனைத்து மதங்களையும் மதிப்பது பற்றி பேசுகிறது. உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றும் அவர் கூறினார்.

சிவராஜ் பாட்டீலின் கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது என குற்றம்சாட்டியது.

பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் ஷேஜாத் பூனவல்லா தனது டுவிட்டில் ஆம் ஆத்மி கட்சியின் இந்து வெறுப்பு மற்றும் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட வேண்டாம் என கூறினார்

பாட்டீல் தனது உரையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வாக்களித்ததாகவும் கூறினார். இருப்பினும், அவர் உரையில் கார்கேவை கந்தேல்வால் என்று தவறாக இரண்டு முறை குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்