அனைவருக்கும் பொதுவானவர் ராமர்...பாஜகவிடம் விட்டுத்தர முடியாது- சசி தரூர் காட்டம்
|அனைவருக்கும் பொதுவான ராமரை பா.ஜ.க.விடம் விட்டுத்தர முடியாது என்று காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் நம்பும் மற்றும் தினமும் பிரார்த்தனை செய்யும் ஒரு கடவுளை நான் ஏன் பா.ஜ.க.விடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை? அனைத்து ராம பக்தர்களும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்பலாம். ஆனால் ஒவ்வொரு ராம பக்தரும் பா.ஜ.க. ஆதரவாளர்களா? என் கருத்துப்படி, இல்லை.அனைவருக்கும் பொதுவான ராமரை பா.ஜ.க.விடம் விட்டுத்தர முடியாது.
மதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத மதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத்தைப் பின்பற்றும் பன்மைத்துவமே ஆகும். நான் கோவிலுக்குச் சென்றால் கடவுமதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத்தைப் பின்பற்றும் பன்மைத்துவமே ஆகும்" என்றார்.