< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அனைத்து ராம பக்தர்களும் பாஜக ஆதரவாளர்கள் இல்லை: சசி தரூர்
|23 Jan 2024 4:55 PM IST
அனைவருக்கும் பொதுவான ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது.
புதுடெல்லி,
ராமபக்தர்கள் அனைவருமே பாஜக ஆதரவாளர்கள் இல்லை என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
" நான் நம்பும் மற்றும் தினமும் பிரார்த்தனை செய்யும் ஒரு கடவுளை நான் ஏன் பாஜகவிடம் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை? அனைத்து ராம பக்தர்களும் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பாஜக விரும்பலாம். ஆனால் ஒவ்வொரு ராம பக்தரும் பாஜக ஆதரவாளர்களா? என் கருத்துப்படி, இல்லை.
அனைவருக்கும் பொதுவான ராமரை பாஜகவிடம் விட்டுத்தர முடியாது. மதச்சார்பின்மை என்பது மதங்களே இல்லாமல் இருப்பதல்ல. அவரவர் விருப்பத்திற்கேற்ப மதத்தைப் பின்பற்றும் பன்மைத்துவமே ஆகும்.
நான் கோயிலுக்குச் சென்றால் கடவுளை வழிபடுவது மட்டுமே நோக்கமாக கொண்டு செல்வேன்" என தெரிவித்தார் .