< Back
தேசிய செய்திகள்
வடகிழக்கு மாநில தலைநகரங்கள் வான், தரை வழியே இணைக்கப்படும்: மத்திய மந்திரி அமித்ஷா உறுதி
தேசிய செய்திகள்

வடகிழக்கு மாநில தலைநகரங்கள் வான், தரை வழியே இணைக்கப்படும்: மத்திய மந்திரி அமித்ஷா உறுதி

தினத்தந்தி
|
1 April 2023 4:40 PM IST

வடகிழக்கு மாநிலத்தின் 8 தலைநகரங்களும் 2025-ம் ஆண்டுக்குள் வான், ரெயில் மற்றும் தரை வழியே இணைக்கப்படும் என மத்திய மந்திரி அமித்ஷா உறுதியளித்து உள்ளார்.

அய்சால்,

பீகாரில் சசராம் பகுதியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், மாநில அரசின் 144 தடை உத்தரவால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மிசோரம் மாநிலத்திற்கு மந்திரி அமித்ஷா சென்றார்.

அவர் தலைநகர் அய்சால் நகரில் நடந்த பொது கூட்டத்தில் உரையாற்றினார். அவர் பேசும்போது, வடகிழக்கு மாநிலத்தின் 8 தலைநகரங்களும் 2025-ம் ஆண்டுக்குள் வான், ரெயில் மற்றும் தரை வழியே இணைக்கப்படும் என உறுதியளித்து உள்ளார்.

தொடர்ந்து அவர், ஒரு காலத்தில் இந்த பகுதியில் அமைதியின்மையும், வன்முறையும் காணப்பட்டது. ஆனால் இன்று முதல்-மந்திரியாக ஜொரம்தங்கா ஆட்சி செய்து வருகிறார். இந்தியாவில் ஜனநாயகத்திற்கான ஓர் எடுத்துக்காட்டு இது. மிசோரமில் இன்று அமைதி காணப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அனைத்து ஆயுத குழுக்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் நடைமுறைக்கு திரும்பி வந்து, ஜனநாயக நடைமுறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும்.

அதன்பின், இந்த பகுதி மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் பங்காற்ற வேண்டும் என்று பேசியுள்ளார். வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சிக்காக மோடி அரசானது வடகிழக்கு பகுதிகளுக்கு 276 சதவீதம் பட்ஜெட்டில் நிதியை அதிகரித்து உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்