< Back
தேசிய செய்திகள்
சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமி வருகிற 19-ந் தேதி வேட்புமனு தாக்கல்
தேசிய செய்திகள்

சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமி வருகிற 19-ந் தேதி வேட்புமனு தாக்கல்

தினத்தந்தி
|
4 April 2023 2:41 AM IST

சென்னப்பட்டணா தொகுதியில் குமாரசாமி வருகிற 19-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதற்காக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) உள்ளிட்ட கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அண்மையில் வெளியிட்டன. இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமி நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வருகிற சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ந் தேதி தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி சென்னபட்டணாவில் நான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். அதேபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் நிகில் வரும் சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் வருகிற 17-ந் தேதி ராமநகரில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. கட்சியின் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிமுடன் ஆலோசனை நடத்திவிட்டு அதை வெளியிட உள்ளோம். மேலும் அடுத்த 5 நாட்களுக்குள் இறுதி பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்