ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி தைரியம் இருக்காது - உமர் அப்துல்லா
|ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி தைரியம் இருக்காது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகர்,
கர்நாடகத்தில் 16-வது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு(2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த சூழலில் கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளை கைப்பற்றி, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. பாரதீய ஜனதாவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து இருக்கின்றன.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சட்டசபைத் தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 8 ஆண்டுகளாக சட்டசபைத் தேர்தல் நடத்தப்படாத ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தேர்தலை நடத்த பாஜகவுக்கு கர்நாடக தேர்தல் முடிவுகள் பயத்தை கொடுத்திருக்கும் என்று உமர் அப்துல்லா மறைமுகமாக சாடியுள்ளார்.