< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த குஜராத் அரசு...!
|22 Oct 2022 12:07 AM IST
தீபாவளி பண்டிகையையொட்டி வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கிடையாது என குஜராத் மந்திரி ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
அகமதாபாத்,
தீபாவளி பண்டிகையையொட்டி 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை வாகன ஓட்டிகளிடமிருந்து குஜராத் போக்குவரத்துறை காவல்துறை எந்த அபராதமும் வசூலிக்காது. இதனால் போக்குவரத்து விதிகளை பின்பற்றக்கூடாது என்று அர்த்தம் இல்லை. தவறு செய்தால் அபராதம் கட்ட தேவையில்லை என குஜராத் உள்துறை மந்திரி ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.
குஜராத்தில் சில நாட்களாக அபராதம் தளர்த்தப்பட்ட நிலையில், தமிழக அரசு போக்குவரத்து விதிமீறலுக்கான ஸ்பாட் அபராதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.