< Back
தேசிய செய்திகள்
சார், மேடம் இல்லை... இனி டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும் - கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சார், மேடம் இல்லை... இனி டீச்சர் என்று தான் அழைக்க வேண்டும் - கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு

தினத்தந்தி
|
13 Jan 2023 8:19 AM IST

கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்றே அழைக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளத்தில் ஆசிரியர்களை சார், மேடம் என அழைக்கக்கூடாது என்றும் டீச்சர் என்றே அழைக்கவேண்டும் என்றும் கேரள பள்ளிக்கல்வித்துறைக்கு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநில கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை அழைப்பதில் பாலினப் பாகுபாடு காட்டப்படுகிறது என குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இதுகுறித்து விசாரித்த ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர், அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர்.

அந்த உத்தரவில், பள்ளி ஆசிரியர்களை, சார் என்றும் மேடம் என்றும் கூறுவதைவிட, பாலினப் பாகுபாடு இல்லாமல், டீச்சர் என அழைப்பதுதான் மிகவும் பொருத்தமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய உத்தரவை அனுப்புமாறு, பள்ளிக்கல்வித்துறைக்கு குழந்தைகள் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

மேலும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறும் பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்