< Back
தேசிய செய்திகள்
சொத்தில் பங்கு இல்லை:  தந்தை, 2 சகோதரிகள் படுகொலை; மகன் தப்பியோட்டம்
தேசிய செய்திகள்

சொத்தில் பங்கு இல்லை: தந்தை, 2 சகோதரிகள் படுகொலை; மகன் தப்பியோட்டம்

தினத்தந்தி
|
15 Aug 2022 1:49 PM IST

உத்தர பிரதேசத்தில் சொத்தில் பங்கு இல்லை என்ற ஆத்திரத்தில் தந்தை மற்றும் 2 சகோதரிகளை படுகொலை செய்து விட்டு மகன் தப்பியோடி விட்டார்.

பாக்பத்,



உத்தர பிரதேசத்தில் பாக்பத் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரிஜ்பால் (வயது 60). இவரது மனைவி சசிபிரபா. இந்த தம்பதிக்கு அமர் என்ற லக்ஷ் என்ற பெயரிலான மகனும், ஜோதி (வயது 25) மற்றும் அனுராதா (வயது 17) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், பிரிஜ்பால் தனது மகன் அமரிடம் சொத்தில் பங்கு கிடையாது என கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு சொத்தில் இருந்து அமரின் பெயரை நீக்கியதுடன், அவருக்கான உரிமையையும் நீக்கி விட்டார்.

இதனால், அமர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், தனது தந்தை மற்றும் 2 சகோதரிகளை படுகொலை செய்து விட்டு அமர் தப்பியோடி விட்டார். இதுபற்றி அமரின் தாயார் சசி பிரபா போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

உடனடியாக போலீசார் சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்