< Back
தேசிய செய்திகள்
குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
2 Aug 2023 7:19 PM GMT

குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் ஓய்வூதியம் தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்தப்பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொது ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய விவரங்களை மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகமும், பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான விவரங்களை பாதுகாப்பு கணக்குகளின் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகமும், தொலைத்தொடர்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கான விவரங்களை தொலைத்தொடர்புத்துறையும், ரெயில்வே ஓய்வூதியதாரர்களுக்கான விவரங்களை ரெயில்வே வாரியமும், தபால்துறை ஓய்வூதியர்களுக்கான விவரங்களை தபால்துறையும் வழங்கியுள்ளன.

இதன்படி, 2022-2023-ம் ஆண்டில் 65.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்து 777 கோடி ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் குறைந்தபட்ச ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் ஆகும். குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு பதில் அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்