< Back
தேசிய செய்திகள்
ஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

ஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
6 April 2023 12:42 AM IST

கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களை பயன்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். அந்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது;-

"மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதார் தகவல்களைப் பயன்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணைய தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கையை கழித்து பார்த்தால் 130.2 பேருக்கு ஆதார் எண்கள் உள்ளன."

இவ்வாறு இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்