< Back
தேசிய செய்திகள்
மாநில அரசுகளிடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை ஒப்படைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
தேசிய செய்திகள்

மாநில அரசுகளிடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை ஒப்படைக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்

தினத்தந்தி
|
2 Aug 2022 4:06 PM GMT

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணியை மாநில அரசுகளிடம் ஒப்படைக்கும் திட்டம் இல்லை என்று மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி ரவிக்குமார், "இந்த ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அரசு நடத்தப் போகிறதா? மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒரே நேரத்தில் கொண்டு வருவதற்கும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள அனுமதிப்பதற்கும் ஏதேனும் திட்டம் உள்ளதா?" என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் அளித்த பதிலில், "2021-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் மார்ச் 28, 2019 அன்று இந்திய அரசிதழில் அறிவிக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021 மற்றும் அத்துடன் தொடர்புடைய கள நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மாநில அரசுகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்