< Back
தேசிய செய்திகள்
உங்கள் மொழியை யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது - மெகபூபா முப்தி
தேசிய செய்திகள்

'உங்கள் மொழியை யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது' - மெகபூபா முப்தி

தினத்தந்தி
|
17 Dec 2023 6:34 AM IST

குழந்தைகளுடன் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும் என மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்முவில் உள்ள குர்ஜார் தேஷ் தொண்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"உங்கள் வீடுகள், உங்கள் தண்ணீர் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம், உங்கள் நிலம் கூட பறிக்கப்படலாம். ஆனால் உங்கள் மொழியை உங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது.

நம் வீட்டில் நமது மொழிகளில் பேச வேண்டும். காஷ்மீரியோ, டோக்ரியோ அல்லது குஜாரியோ, நம்முடைய மொழிகளைப் பேசுவதை நாம் நிறுத்திவிட்டோம். இப்போது, ஒரு குழந்தை பிறந்தவுடன் பெற்றோர்கள், 'இங்கே வா', 'அங்கே போ' என்பதற்கு கூட ஆங்கிலத்தை பயன்படுத்துகிறார்கள்.

எனவே, உங்களது மொழியைக் காப்பாற்ற விரும்பினால், உங்கள் சொந்த மொழியில், உங்கள் தாய்மொழியில், உங்கள் குழந்தைகளுடன் வீட்டில் பேசுங்கள். அதை யாராலும் உங்களிடம் இருந்து பறிக்க முடியாது."

இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்