டெல்லி: பொது இடங்களில் முககவசம் அணியாவிட்டால் விதிக்கப்பட்ட அபராதம் நீக்கம்
|டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் மாநிலங்களில் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவதால், பொது இடங்களில் முககவசம் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) கூட்டத்தில் அபராதம் விதிப்பதை திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.