< Back
தேசிய செய்திகள்
திருமணம் வேண்டாம்... 11-வது மாடியில் இருந்து குதித்த இரு சகோதரிகள்
தேசிய செய்திகள்

திருமணம் வேண்டாம்... 11-வது மாடியில் இருந்து குதித்த இரு சகோதரிகள்

தினத்தந்தி
|
11 Sept 2022 11:55 AM IST

டெல்லியில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தின் 11-வது மாடியில் இருந்து சகோதரிகள் இருவர் குதித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



புதுடெல்லி,



நொய்டா நகரில் வசித்து வருபவர் சுதா. இவரது கணவர் சுபாஷ் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். சுதாவின் இரு மகள்களான நிக்கி மற்றும் பல்லவிக்கு திருமணம் செய்து வைக்க அவர்களது தாயார் விரும்பியுள்ளார்.

ஆனால், சகோதரிகளுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், நொய்டா நகரில் செக்டார் 96 பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் 11-வது மாடிக்கு சென்று அதிகாலையில் சகோதரிகள் இருவரும் கீழே குதித்து உள்ளனர்.

அவர்களை வீட்டின் காணாமல் தவித்த தாய் சுதா, தனது மகள்களை தேடி வெளியே வந்து பார்த்துள்ளார். இதில், சகோதரிகள் இருவரும் காயங்களுடன் கீழே கிடந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் மூத்த சகோதரி உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றொரு சகோதரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வால் திருமணம் செய்து வைக்க சுதா முடிவு செய்துள்ளார். ஆனால், அது பிடிக்காமல் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கட்டாயப்படுத்தி தங்களுக்கு திருமணம் செய்து வைக்க தாயார் முயன்றுள்ளார் என அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளனர். திருமணம் வேண்டாம் என்பதற்காக சகோதரிகள் இருவர் தற்கொலை நோக்கில் கட்டிடத்தில் இருந்து குதித்து உள்ளது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்