< Back
தேசிய செய்திகள்
டெல்லி மெட்ரோ ரெயில்களுக்குள் சத்தமாக சிரிக்கக்கூடாது - புதிய உத்தரவு
தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில்களுக்குள் சத்தமாக சிரிக்கக்கூடாது - புதிய உத்தரவு

தினத்தந்தி
|
21 Aug 2022 3:08 AM IST

டெல்லி மெட்ரோ ரெயில்களுக்குள் சத்தமாக சிரிக்கக்கூடாது ‘மிஸ்டர் பீன்’ வீடியோ காட்சியை பதிவிட்டு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

பஸ், ரெயில்களில் சத்தமாக பேசுவது, சிரிப்பது, அதிக சத்தத்துடன் இசை எழுப்புவது போன்றவை சக பயணிகளுக்கு இடையூறாக இருக்கும். எனவே அதுபோல செய்யக்கூடாது என்பதை டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் டுவிட்டரில் வித்தியாசமான முறையில் வலியுறுத்தி உள்ளது. குழந்தைத்தனமான குறும்பு செய்து உலகளவில் பிரபலமான "மிஸ்டர் பீன்" நடித்த ஒரு குறும்புத்தன காட்சி, இதற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதில் 'மிஸ்டர் பீன், புத்தகம் படித்தபடியே ரெயில் பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு எதிரில் அமர்ந்திருக்கும் பயணியும் ஒரு புத்தகம் படிக்கிறார். அது நகைச்சுவை ததும்பும் புத்தகம் போலும். அதில் லயித்துப்போன அந்த பயணி தன்னையறியாமல் சத்தம்போட்டு இடைவிடாமல் சிரிக்கிறார். அதில் இருந்து தப்பிக்க மிஸ்டர் பீன் செய்யும் குறும்புகளே காட்சிகளாக அமைந்துள்ளன.

இதை டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் பதிவேற்றம் செய்து, "மிஸ்டர் பீன் நமக்கெல்லாம் ஒரு செய்தி சொல்கிறார். டெல்லி மெட்ரோவுக்குள் சத்தமாக இசைக்கவோ அல்லது சத்தமாக பேசி சிரிக்கவோ கூடாது. ஏனெனில் இது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும்" என குறிப்பிட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்