அரசு அதிகாரிகள், போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை கிடையாது
|மைசூருவில் அரசு அதிகாரிகள், போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை கிடையாது என்று கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
மைசூரு:
மைசூருவில் அரசு அதிகாரிகள், போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை கிடையாது என்று கலெக்டர் ராஜேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
கலெக்டர் ஆலோசனை
காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களில் ஒன்றான கிரகலட்சுமி திட்டம் வருகிற 30-ந்தேதி மைசூருவில் நடக்க உள்ளது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த கிரகலட்சுமி திட்ட தொடக்க விழா மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மைசூரு மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா, அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
விடுமுறை கிடையாது
கிரகலட்சுமி திட்டத்தின் தொடக்க விழா வருகிற 30-ந்தேதி மைசூருவில் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும். எந்தவித குறையும் இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மைசூரு மட்டுமின்றி மண்டியா, சாம்ராஜ்நகர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் போலீசார் பாதுகாப்பு முன்னெற்பாடுகளை செய்ய வேண்டும்.
இந்த கிரகலட்சுமி திட்ட தொடக்க விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும். இதனால் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் நாளை (அதாவது இன்று) 4 நாட்கள் விடுமுறை கிடையாது. விடுமுறையில் உள்ள அதிகாரிகளும், போலீசாரும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.