< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தென்னை தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது - நிர்மலா சீதாராமனிடம் அ.தி.மு.க.வினர் மனு
|3 Aug 2023 7:15 PM IST
அ.தி.மு.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.
புதுடெல்லி,
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இன்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சந்தித்தனர். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.
அந்த மனுவில், தென்னை தொடர்பான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கூடாது என்றும், தேங்காய் எண்ணெய்யை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தென்னை நார் மற்றும் கயிறு தயாரிப்பு நிறுவனங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.