< Back
தேசிய செய்திகள்
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - கிரண் ரிஜிஜூ
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை - கிரண் ரிஜிஜூ

தினத்தந்தி
|
2 Feb 2023 4:57 PM IST

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கிரிமினல் குற்றங்களுக்கு மட்டுமே ஒரே விதமான சட்டம் இருக்கிறது. சிவில் என்று சொல்லப்படக்கூடிய திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் நாடு முழுவதும் வெவ்வேறு விதமான சட்டப்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவை அனைத்தையும் மாற்றி விட்டு பொது சிவில் சட்டம் என்று ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்துள்ள அவர், பொது சிவில் சட்டம் குறித்து 21-வது சட்ட ஆணையம் முடிவு எடுப்பதற்கு முன்னே அதன் பதவிக்கால முடிவடைந்து விட்டது என்று தெரிவித்தார்.

மேலும் பொது சிவில் சட்டம் குறித்து 22-வது சட்ட ஆணையம் முடிவெடுக்கலாம் என்றும் மாநிலங்களவையில் கிரண் ரிஜிஜூ விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்