< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழு அமைக்காத விவகாரம் - தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
|11 May 2023 6:23 PM IST
15 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளிட்டவற்றில் பாலியல் தொல்லை புகார்களை விசாரிக்க குழுக்கள் அமைக்கவில்லை என வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மத்திய இளைஞர் விவகாரம், மத்திய விளையாட்டுத்துறை, இந்திய விளையாட்டு மேம்பாட்டு அணையம் ஆகியவற்றின் செயலாளர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்ட 15 தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளில் பாலியல் புகார்களை விசாரிப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.