< Back
தேசிய செய்திகள்
பீகார் மேல் சபைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் போட்டி

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

பீகார் மேல் சபைக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் போட்டி

தினத்தந்தி
|
6 March 2024 5:10 AM IST

2005 முதல் தற்போது வரை நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை உறுப்பினராகவே தேர்வு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பாட்னா,

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், அந்த மாநில மேல்-சபை உறுப்பினராக இருந்து வருகிறார். அந்த பதவி காலம் முடிவடைவதால், மேல்-சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்த தலைவர்களான சாம்ராட் சவுத்ரி, பா.ஜனதாவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா, ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல் மந்திரி சந்தோஷ் சுமன் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த காலித் அன்வர் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

2005 முதல் தற்போது வரை நிதிஷ்குமார், தேர்தலில் போட்டியிடாமல், மேலவை உறுப்பினராகவே தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்