< Back
தேசிய செய்திகள்
நிதின் கட்காரிக்கு வந்த கொலை மிரட்டலால் பரபரப்பு; வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
தேசிய செய்திகள்

நிதின் கட்காரிக்கு வந்த கொலை மிரட்டலால் பரபரப்பு; வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
14 Jan 2023 9:05 PM IST

நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்த போதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.

மும்பை,

நாக்பூரில் மத்திய போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரியின் வீடு, அலுவலகம் உள்ளது. இன்று காலை 11.25 மணி, 12.30 மணிக்கு நாக்பூர் சவுக், காம்ளா பகுதியில் உள்ள நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்த போதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார்.

மேலும் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் எனவும் மிரட்டினார். மிரட்டல் குறித்து அலுவலக ஊழியர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாக்பூரில் உள்ள நிதின்கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாக்பூரில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்