< Back
தேசிய செய்திகள்

தேசிய செய்திகள்
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைப்பு

17 July 2024 3:55 AM IST
பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் குழு மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நிதி ஆயோக் குழுவை மீண்டும் மாற்றி அமைத்துள்ளது. ஆயோக்கின் தலைவராக பிரதமர் இருக்கும் நிலையில், துணைத்தலைவர் மற்றும் இதர முழுநேர உறுப்பினர்கள் பதவியில் எந்த மாற்றமும் இல்லை.
விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புதிய அதிகாரபூர்வ உறுப்பினராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பிறகு புதிய உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
அமைச்சரவை செயலகத்தின் அறிவிப்பை தொடர்ந்து நிதி ஆயோக்கின் திருத்தப்பட்ட அமைப்புக்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார் என்று ராஷ்டிரபதி பவன் தெரிவித்துள்ளது.