< Back
தேசிய செய்திகள்
நிபா வைரஸ் பரவல்: மாஹே பிராந்தியத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி அரசு
தேசிய செய்திகள்

நிபா வைரஸ் பரவல்: மாஹே பிராந்தியத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி அரசு

தினத்தந்தி
|
16 Sept 2023 8:10 AM IST

மாஹே பிராந்தியத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாஹே,

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எல்லை பகுதியான புதுச்சேரி மாநிலத்தின் மாஹே பிராந்தியத்தில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக பிராந்திய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், இதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் 100 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது, காய்ச்சலோடு மருத்துவமனைக்கு வருபவர்களை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் விவரங்களை சேகரித்து கண்காணிக்க வேண்டும், நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அனைத்து துறையினரும் கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்