< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை தகவல்
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை தகவல்

தினத்தந்தி
|
22 Sept 2023 9:10 PM IST

புதுச்சேரி ஜிப்மரில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று புதுவை சுகாதாரத்துறை தெரிவி

புதுச்சேரி,

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, அம்மாநில சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தது என்றும் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை புதுச்சேரி சுகாதாரத்துறை மறுத்துள்ளது.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று புதுவை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு இருந்த நபருக்கு அனைத்து பரிசோதனைகளும் நெகட்டிவாக வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்