< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பஞ்சாப்பில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது
|11 March 2024 1:41 AM IST
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர்.
ஜலந்தர்,
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 22 கிலோ அபின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும், ரூ.9 கோடி மதிப்பிலான 30 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர். அதோடு போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தின் மூலம் வாங்கிய ரூ.6 கோடி மதிப்புடைய சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் டெல்லியில் உள்ள 6 சுங்க அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.